Samacheer Kalvi 9th Tamil Guide
Chapter 1.1 திராவிட மொழிக்குடும்பம்
A Complete Guide with Questions and Answers

Students can download and use this comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 1.1, "திராவிட மொழிக்குடும்பம்," featuring all questions and answers, a summary, and notes. This resource helps in revising the complete Tamilnadu State Board New Syllabus, completing homework, and scoring high marks in exams.
கற்பவை கற்றபின்
1. உங்கள் பெயருக்கான விளக்கம் தெரியுமா? உங்கள் பெயரும் நண்பர் பெயரும் தனித்தமிழில் அமைந்துள்ளதா? கண்டறிக.
விடை:
- அன்பரசன் – அன்புக்கு அரசன்
- புகழினியன் – புகழுக்கு இனியன்
- அருள்செல்வி – அருள் நிறைந்த செல்வி
- மங்கையர்க்கரசி – மங்கையர்களில் அரசி
- அருள்வளவன் – அருளுடைய வளவன்
2. பயன்பாட்டில் எவ்வாறெல்லாம் தமிழ் மொழியின் வேர்ச்சொற்கள் வடிவமாற்றம் பெறுகின்றன என்பது குறித்துக் கலந்துரையாடுக.
விடை:
- தமிழ் மொழியில் ஒரு சொல் விளைவதற்கு வேராக இருப்பது 'வேர்ச்சொல்' எனப்படும்.
- ஒரு சொல் தோன்றுவதற்கு அடியாக இருப்பது 'அடிச்சொல்' எனப்படும்.
- ஒரு சொல்லின் முதலாக அமைவது 'முதல்நிலை' எனப்படும். இலக்கண நூலார் இதனை 'பகுதி' என்று கூறுவர்.
எடுத்துக்காட்டு:
- செய் – செய்தாள், செய்கிறாள், செய்வாள், செய்து, செய்த, செய்வீர், செய்கிறோம்.
- வா – வந்தான், வருகிறான், வருவான், வந்து, வந்த, வருகிறோம், வருவோம்.
பாடநூல் வினாக்கள்
குறுவினா
1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
விடை: நான் பேசும் மொழியான தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தென்திராவிட மொழிகளுள் ஒன்றாகும்.
சிறுவினா
1. திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
விடை:
- திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவியுள்ள நில அடிப்படையில் தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- மலையாளம்: மலையாள மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பாலறிக கிளவிகள் இல்லை. தனிச் சொற்களைக் கொண்டே ஆண், பெண் வேறுபாட்டை அறிய முடியும்.
- தமிழ்: தமிழ்மொழி, பல திராவிட மொழிகளின் தாய்மொழியாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன. இதுவே இதன் தனிச்சிறப்பு.
2. 'மூன்று' என்னும் எண்ணுப்பெயர், பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?
விடை: திராவிட மொழிகளில் எண்ணுப்பெயர்கள் பெரும்பாலும் ஒன்று போலவே அமைந்துள்ளன. 'மூன்று' என்னும் தமிழ் எண்ணுப்பெயர், பிற திராவிட மொழிகளில் பின்வருமாறு அமைகிறது.

நெடுவினா
1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
முன்னுரை:
திராவிட மொழிகளுள் முதன்மையாக விளங்குவது தமிழ். எத்தகைய கால மாற்றத்திலும் மாறிவரும் புதுமைகளுக்கும் ஈடு கொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. தமிழாய்ந்த அயல்நாட்டவரும் இதன் செம்மொழித் தன்மையைத் தரணியெங்கும் எடுத்துரைத்து வருகின்றனர். திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள்:
சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல் (அடிச்சொல்) ஆகும். திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், அவை பொதுவான அடிச்சொற்களைக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.
சான்று (அடிச்சொல்):

திராவிட மொழிகளின் எண்ணுப்பெயர்களும் ஒன்று போலவே அமைந்துள்ளன.
சான்று (எண்ணுப்பெயர்):

திராவிட மொழிகளுள் பிறமொழித் தாக்கம் மிகவும் குறைவாகக் காணப்படும் மொழி தமிழே ஆகும். தமிழ், பல திராவிட மொழிகளுக்குத் தாய்மொழியாகக் கருதப்படுகிறது. தமிழின் பல அடிச்சொற்களின் ஒலியன்கள், 'ஒலி இடம்பெயர்தல்' என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறியிருக்கின்றன. சுட்டுப்பெயர்களும் மூவிடப்பெயர்களும் கூடப் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்றுள்ளன.
நிறைவுரை:
திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியாகத் திகழ்கின்ற தமிழ், பிற திராவிட மொழிகளை விட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. இந்திய மொழிக் குடும்ப வகைகள் எத்தனை?
2. பொருந்தாததைத் தேர்ந்தெடு.
3. பொருத்துக.
4. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்த முதல் அறிஞர் யார்?
5. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை எதற்கும் மேற்பட்டது?
6. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளோடு மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டவர் யார்?
7. ‘தமிழியன்’ என்று தென்னக மொழிகளை பெயரிட்டு அழைத்தவர் யார்?
நிரப்புக
8. மொழிக் குடும்பத்தின் வகைகள் எத்தனை?
விடை: நான்கு
9. ‘இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலையாகத் திகழ்கிறது’ என்றவர் யார்?
விடை: ச. அகத்தியலிங்கம்
10. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
விடை: கால்டுவெல்
11. ‘திராவிடம்’ என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
விடை: குமரிலப்பட்டர்
12. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?
விடை: 28
13. தமிழ்மொழியின் பழமையான இலக்கண நூல் எது?
விடை: தொல்காப்பியம்
14. ‘லீலாதிலகம்’ எம்மொழியின் பழமையான இலக்கண நூல்?
விடை: மலையாளம்
குறுவினா (கூடுதல்)
1. மொழிக்குடும்பம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
விடை: உலகத்திலுள்ள மொழிகள் அவற்றின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில் மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கப்படுகின்றன.
2. திராவிட மொழிகள் பொதுவான அடிச்சொல் பெற்றிருப்பதை விளக்கு.
விடை: சொற்களின் இன்றியமையாப் பகுதி அடிச்சொல் அல்லது வேர்ச்சொல் எனப்படும். திராவிட மொழிகள் பொதுவான அடிச்சொற்களைப் பெற்றுள்ளன. சான்றாக, 'கண்' என்ற தமிழ்ச் சொல் பிற திராவிட மொழிகளிலும் சிறு மாற்றங்களுடன் காணப்படுகிறது.

3. தென்திராவிட மொழிகள் யாவை?
விடை: தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, கோத்தா, தோடா, கொரகா, இருளா ஆகியவை தென்திராவிட மொழிகள் ஆகும்.
சிறுவினா (கூடுதல்)
1. தமிழின் தனித்தன்மைகள் யாவை?
விடை:
- தொன்மையும், இலக்கண இலக்கிய வளமும் உடையது தமிழ்மொழி.
- இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற பல நாடுகளில் பேசப்படும் பெருமையுடையது.
- தனக்கெனத் தனித்த இலக்கண வளத்தைப் பெற்றுத் தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது.
- திராவிட மொழிகளில் பிறமொழித் தாக்கம் குறைவாகக் காணப்படும் மொழி தமிழ்.
- பல திராவிட மொழிகளின் தாய்மொழியாகத் திகழ்கிறது.
- ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்றது.
- இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.
- பிற திராவிட மொழிகளை விட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந்துணையாக இருக்கிறது.